'மாமா சரக்கு வாங்க பணம் கொடு' மதுவுக்காக அரங்கேறிய கொடூரம்.. சென்னையில் துள்ளத்துடிக்க உயிரைவிட்ட மாமா.!



Nephew Kills Uncle Over Liquor Money in Chennai; Shocking Truth Exposed During Police Probe

தாய்மாமனை கொலை செய்ததாக மருமகன் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

ஆட்டோ ஓட்டுநர் குடும்பம்:

சென்னையில் உள்ள புளியந்தோப்பு, கே.பி. பார்க், 13வது பிளாக் பகுதியில் வசித்து வருபவர் முருகன் (வயது 46). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். முருகனின் மனைவி மீனா. தம்பதிகளுக்கு நிவேதா (வயது 19) என்ற மகளும், யோகேஷ் (வயது 15) என்ற மகனும் இருக்கின்றனர்.  

இதையும் படிங்க: "என் பொண்டாட்டிய உன் மகன் கூட்டிட்டு போறான்" மகனின் கள்ளக்காதலால் தந்தை பலி.. கோவையில் ரணகொடூரம்..!

போதைக்கு அடிமை:

மதுபோதைக்கு அடிமையான முருகன் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையிடன் மீனா தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் மதுராந்தகத்தில் வசித்து வந்துள்ளார். முருகன் தனியே இருக்கிறார்.

ஆட்டோவில் வசிக்கிறார்:

வருமானத்துக்காக வீட்டை லீசுக்கு விட்டுள்ளனர், ஆட்டோவில் தங்கி இருந்து வந்துள்ளார். அடிக்கடி வியாசர்பாடி ஏரிக்கரையில் இருக்கும் அக்கா மாலாவின் வீட்டுக்கும் சென்று வருவார். இதனிடையே, மாலாவின் மகன் பவித்ரன் தனது தாய்மாமா முருகனை பார்க்க நேற்று வந்துள்ளார். முருகன் மதுபோதையில் இருந்துள்ளார்.

Crime news

மதுவுக்காக தகராறு:

ஆட்டோவில் மதுவும் இருந்த நிலையில், பவித்ரன் தனக்கு மது வேண்டும் என கேட்டுள்ளார். முருகனோ மதுபானம் குறைவாக உள்ளதால் தரமுடியாது என கூறியுள்ளார். மதுபானம் வாங்க பணமும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பவித்ரன் முருகனை தாக்கி இருக்கிறார். இதில் முருகனின் தலை, முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

அம்மாவிடம் நாடகம்:

பின் முருகனை வீட்டுக்கு அழைத்துச் சென்றவர், தாய் மாலாவிடம் மாமாவை யாரோ தாக்கிவிட்டார்கள் என கூறி இருக்கிறார். பின் உடனடியாக அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து மாலா முருகனை மர்ம நபர்கள் கொலை செய்ததாக புகார் அளித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது பவித்ரன் சிக்கி இருக்கிறார். விசாரணைக்குப்பின் உண்மை அம்பலமான நிலையில், பவித்ரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!