நெல்லையில் பயங்கரம்... போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்.!! 2 பேர் கைது.!!



nellai-si-and-constable-attacked-with-sickle-on-the-roa

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம்  பகுதியில் போலீஸ் எஸ்.ஐ கார்த்திகேயன் மற்றும் ஏட்டு கருணைராஜ், காவலர் மகேஷ் ஆகியோர் நேற்று பொன்னாக்குடி அருகேயுள்ள பஜாருக்கு சென்ற போது மர்ம நபர்கள் 2 பேர் போலீசாரை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர்.

பஜாருக்கு சென்ற காவல் அதிகாரிகள் இருந்த பகுதியில் 2 பேர் கையில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தனர். ஆயுதங்களுடன் வாலிபர்களை பார்த்த போலீசார் இது குறித்து கேட்டுள்ளனர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த வாலிபர்கள் திடீரென எஸ்.ஐ கார்த்திகேயனின் கழுத்தில் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். நற்சமையமாக அவர் சுதாரித்து விலக்கியுள்ளார். அதேபோல் ஏட்டு கருணை ராஜூம் அரிவாள் வெடட்டிலிருந்து தப்பியுள்ளார். இருவரையும் பிடிக்க முயன்ற போது அந்த மர்ம நபர்கள் தப்பியோடினர்.

tamilnadu

இதனையடுத்து எஸ்.ஐ  கார்த்திகேயன் முன்னீர்பள்ளம் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை வெட்ட முயன்ற மறுகால் குறிச்சி ஊரைச் சேர்ந்த வான் மகேஷ்(25) மற்றும் உத்தம பாண்டியன் குளத்தைச் சேர்ந்த சூர்யா (20) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நடுரோட்டில் காவல்துறை அதிகாரிகளுக்கு நடந்த இச்சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்! வீடு புகுந்து கணவனை சுட்டுவிட்டு மனைவியையும், பெண் குழந்தைகளையும் கடத்திய கும்பல்! அதிர்ச்சி தரும் பரபரப்பு சம்பவம்...

இதையும் படிங்க: மது போதை தகராறு... முதியவர் மிதித்து கொலை.!! சிறுவன் உட்பட 2 பேர் கைது.!!