அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
மது போதை தகராறு... முதியவர் மிதித்து கொலை.!! சிறுவன் உட்பட 2 பேர் கைது.!!
கரூர் மாவட்டம் லைட் ஹவுஸ் பகுதியில் வசித்து வந்த சுப்பிரமணி(60). இவர் ஓட்டல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு சில காரணங்களால் இவரது வேலை பறிபோனது. அதனால் மன வருத்தத்திலிருந்த சுப்பிரமணி மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.
தினமும் மது அருந்திவிட்டு சுற்றி திரிந்த சுப்பிரமணி நேற்று அதிகாலை 3 மணியளவில் லைட் ஹவுஸ் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே போதையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 2 வாலிபர்களை பார்த்து வம்பிழுத்துள்ளார். டேய் யாருடா நீங்க இந்த பக்கம் என்ன வேலை உங்களுக்கு? என அந்த வாலிபர்களிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இந்நிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த 2 வாலிபர்களும் மது போதையில் இருந்ததால் இரு தரப்பினரும் சுயநினைவின்றி சண்டை போட்டுள்ளனர். ஆத்திரத்தில் சுப்பிரமணியை கீழே தள்ளி நெஞ்சிலே ஏறி மிதித்துள்ளனர். இதனால் மூச்சு திணறிய சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளான சரண்ராஜ்(19) மற்றும் (17) வயது சிறுவனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!