கட்டாய கருக்கலைப்பு... 18 மாதங்கள் முறையற்ற உறவு! ஜனசேனா எம்.எல்.ஏ மீது பெண் பாலியல் குற்றசாட்டு! வைரலாகும் வீடியோவால் ஆந்திர அரசியலில் பெரும் அதிர்வு!



andhra-mla-sexual-allegation-arava-sridhar-rao-controve

ஆந்திரப் பிரதேச அரசியல் வட்டாரத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. ஆளும் கூட்டணி அரசின் முக்கிய முகமாக கருதப்படும் ஜனசேனா கட்சியின் எம்.எல்.ஏ. மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு, அரசியலையும் சமூகத்தையும் ஒருசேர அதிர வைத்துள்ளது.

ஃபேஸ்புக் மூலம் தொடங்கிய பழக்கம்

ரயில்வே கோடூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், மாநில அரசு கொறடாவுமான அரவா ஸ்ரீதர் ராவ், சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் பழக்கமான ஒரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, சுமார் 18 மாதங்கள் வரை முறையற்ற உறவு வைத்திருந்ததாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.

கர்ப்பம் மற்றும் கட்டாய கருக்கலைப்பு குற்றச்சாட்டு

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில், எம்.எல்.ஏ உடனான உறவில் அவர் கர்ப்பமடைந்ததாகவும், பின்னர் அழுத்தம் காரணமாக கருக்கலைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: இறந்த குழந்தைகளை பார்த்து கதறி அழுத அமைச்சர் அன்பில் மகேஷ்! கண்ணீர் விட்டு ஆறுதல் கூறிய செந்தில் பாலாஜி! வீடியோ காட்சி...

அரசியலில் பெரும் அதிர்வு

இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் கணவருக்குத் தெரியவந்த பிறகே பொதுவெளியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சம்பவம் ஆந்திர கூட்டணி அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எம்.எல்.ஏ மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

பொதுவாழ்வில் இருக்கும் மக்கள் பிரதிநிதி மீது இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர அரசியல் சூழலில் இந்த விவகாரம் வரும் நாட்களில் மேலும் பரபரப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: நீ முஸ்லீம்! வெளியே போ... உன்னை பலாத்காரம் செய்வோம்! டி -மார்ட்டில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை! வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு!!!