தமிழகம்

விவசாயமுயம் அழிஞ்சுடுச்சு, இப்போ நீங்களும் போய்ட்டீங்களே..... தமிழகமே சோகத்தில் மூழ்கியது!.

Summary:

nel jeyaraman died today

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். இவர் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து  திருத்துறைப்பூண்டியில் தொழிலாளியாக வேலை செய்தார்.

இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வாரின் வாரிசாக இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி 150க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர் நெல் ஜெயராமன். 

ஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த 2006 முதல் நடத்துகிறார். தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்பார்கள். 

இவரது சேவையை பாராட்டி குடியரசுத் தலைவர் விருது மற்றும் தமிழக அரசின் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

                  nel jeyaraman க்கான பட முடிவு

இத்தகைய உன்னதமான பணிகளைச் செய்துவரும் ‘நெல்’ ஜெயராமன், கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இவரை நடிகர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் பார்த்து ஆறுதல் கூறி வந்தனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று மருத்து  நிர்வாகம் அறிவித்துள்ளது. இவரது இழப்பு தமிழக விவசயிகளுக்கு பேரிழப்பு. இதனால் விவசாய ஆர்வலர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.


Advertisement