தமிழகம்

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த போலீஸ் அதிகாரியின் மகள் திடீர் தற்கொலை! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

Neet exam student commit suicide

நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், நீட் தேர்வு பயத்தால் மதுரையில் 19 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்த ஜோதி துர்காவின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் மாணவி தற்கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மதுரையில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முருகசுந்தரம். இவரது மகள் ஜோதி துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். இவர்களது குடும்பம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நாளை செப்டம்பர் 13 ஆம் தேதி ஞாயிற்று கிழமை நீட் தேர்வு நடைபெறுகிறது.

 நீட் தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement