தமிழகம் மருத்துவம்

சித்த மருத்துவத்துக்கும் நீட் தோ்வா? அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு :

Summary:

neet exam

வருகிற கல்வியாண்டு முதல் சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய படம்
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டு நாடு முழுவதும் நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் சித்த மருத்துவம், ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவ படிப்புகளுக்கும் 2018-19ம் கல்வியாண்டு முதல் நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
ஆனால் கடந்த ஆண்டு 12  வகுப்பு  மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற்றது. 
ஆனால் இந்த ஆண்டு  சித்த மருத்துவம் உட்பட இந்தியமுறை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள்,  நீட் தோ்வில் கட்டாயம் பங்குகொள்ள வேண்டும். என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்  


Advertisement