சாதி மறுப்பு திருமணம்.. மளிகைகடைக்காரானுடன் கள்ளக்காதல்..! இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட காதல் கணவன்.!

சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட கணவன், மனைவியின் கள்ளத்தொடர்பால் அவரை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம், நவனி தேவேந்திர தெருவை சார்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 25). இவர் மரம் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நந்தினி (வயது 22). இவர்கள் இருவருக்கும் 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தமிழ்செல்வன் நேற்று காளை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, நந்தினியை சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
கொலையை செய்துவிட்டு உறவினரின் வீட்டில் பதுங்கியிருந்த தமிழ் செல்வனை, புதுசத்திரம் காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட தமிழ்செல்வன், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த வாக்குமூலத்தில், "கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக நாமக்கல் மாவட்டம் பாப்பிநாயக்கன்பட்டி, முள்ளம்பட்டி பகுதியை சார்ந்த நந்தினியுடன் எனக்கு நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் எங்களுக்குள் காதலாக மாறவே, இருவரும் வெவ்வேறு பிரிவை சார்ந்தவர்கள் என்பதால் நந்தினியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
நந்தினியின் தரப்பு எதிர்ப்பை மீறி இருவரும் கலப்புத்திருமணம் செய்து, நவனி தேவேந்திர தெருவில் வசித்து வந்தோம். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கள்ளக்காதல் காரணமாக எங்களின் வாழ்க்கை தடம்புரள தொடங்கியது. ஊரில் மளிகைக்கடை நடத்தி வரும் கண்ணூர்பட்டியை சார்ந்த ரமேஷ் (வயது 30) மனைவியின் மீது ஆசை கொண்டுள்ளார்.
எனது மனைவியை மயக்க எதுவாக மளிகைப்பொருள் கடை அவருக்கு உதவியுள்ளது. புதுசத்திரம் சென்று மளிகை பொருட்கள் வாங்க நேரம் ஆகும் என்ற காரணத்தால், மனைவி நந்தினி ரமேஷின் கடையில் மளிகை பொருட்கள் வாங்குவார். அதன்போது, மனைவியிடம் பல ஆசை வார்த்தையை ரமேஷ் அள்ளிவிட்டு இருக்கிறார்.
இந்த விஷயத்தை அறிந்துகொண்ட நான் ரமேஷை கண்டித்தும் கேட்கவில்லை. நந்தினியும் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை. அவசரத்திற்கு மளிகை கடையையே நம்பி இருந்ததால், சமையலுக்கு தேவையான பொருட்களை ரமேஷின் கடையில் வாங்கி வந்தோம். தினமும் ரமேஷ் என்னைப்பற்றி தவறாக மனைவியிடம் சொல்லி, நந்தினியை அவனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தொடங்கினான்.
இருவரும் நெருங்கி பழக தொடங்கியதால் எங்களின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இருவரின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாற, இந்த விஷயம் எனக்கு தெரியவந்தது. இதனால் நந்தினியிடம் ரமேஷிடம் பேச வேண்டாம், பழக வேண்டாம் என கண்டித்தேன். காலையில் எழுந்து வழக்க்கம்போல நான் பால் வாங்குவதற்கு புறப்பட்டு சென்றேன்.
வீட்டிற்கு வரும் நேரத்தில் நந்தினி ரமேஷிடம் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை வெட்டிக்கொலை செய்தேன். தற்போது காவல் துறையினர் கைது செய்துவிட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.