பேருந்தை நிறுத்தாமல் சென்ற நடத்துனர்.. ரன்னிங்கில் இறங்கி படுகாயமடைந்த மாணவி..!



namakkal-school-girl-accident-issue

பள்ளி நிறுத்தத்தில் பேருந்து நிற்காததால் படியிலிருந்து பேருந்து செல்லும் போது, கீழே இறங்கிய மாணவி பலத்த காயமடைந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகாமையில் ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் வசித்து வருபவர் இனியாஸ்ரீ. இவர் கடந்த திங்கட்கிழமை காலை பள்ளிக்கு செல்வதற்காக குமரவேல் பஸ் சர்வீஸ் என்ற ஒரு தனியார் பேருந்தில் ஏறி இருக்கிறார்.

அப்போது நடத்துனர் சிறுமியிடம் பள்ளி நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என்று கூறிய நிலையில், பள்ளி நிறுத்தம் வந்ததும் பேருந்து மெதுவாக செல்லும் போது இறங்கி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

namakkal

ஆனால், பள்ளி நிறுத்தம் வந்ததும் பேருந்தின் வேகம் குறையாமல் சென்று கொண்டிருந்ததால், பள்ளியில் இறங்கியாக வேண்டும் என்ற ஒரு பதற்றத்தில் படியிலிருந்து இனியாஸ்ரீ கீழே இறங்கியுள்ளார்.

இந்த நிலையில், ஓடும் பேருந்தில் இருந்து இறங்கியதால் இனியாஸ்ரீ கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். தற்போது இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.