தைராய்டு பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? இதையெல்லாம் கட்டாயம் சாப்பிடக்கூடாதாம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க...



thyroid-diet-tips-tamil

தைராய்டு பிரச்சனைக்கு ஏற்ற உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

தைராய்டு குறைபாடு (Hypothyroidism) என்பது கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பியில் ஹார்மோன் குறைவாக சுரப்பதால் உருவாகும் நிலையாகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கிறது. இந்தியாவில் குறிப்பாக பெண்கள் இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தைராய்டு உணவு

தைராய்டு பிரச்சனையுடன் இருக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை பாதிக்கக்கூடிய சில உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற சில காய்கறிகள்

சோயா மற்றும் சோயா சார்ந்த பொருட்கள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

தைராய்டு உணவு

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள்

துரித உணவுகள்

குளிர்பானங்கள் மற்றும் காபி

மதுபானங்கள்

செயற்கை இனிப்பூட்டிகள்

இவை தைராய்டு செயல்பாட்டை குறைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தைராய்டு பிரச்சனையுடன் இருக்கும்போது சாப்பிட உகந்த உணவுகள்

தைராய்டு உணவு

தைராய்டு செயல்பாட்டை தூண்டவும் மேம்படுத்தவும் கீழ்க்கண்ட உணவுகளை உணவில் சேர்க்கலாம்.

அயோடின் கலந்த உப்பு

கடல் உணவுகள் (மீன், இறால்) – ஓமேகா-3 கொழுப்பு அமிலம்

செலினியம் நிறைந்த கோழி, காளான்

பூண்டு, பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள்

முட்டை

முழு தானியங்கள் (பழுப்பு அரிசி, ஓட்ஸ்)

மெலிந்த புரத உணவுகள்

காய்கறிகள்

பெக்டின் நிறைந்த பழங்கள் (ஆப்பிள், ஆரஞ்சு, பெர்ரி வகைகள்)

இவை உடலில் ஹார்மோன் சமநிலையை பேணுவதற்கு உதவியாக இருக்கும்.

 

இதையும் படிங்க: அதிகமாக தண்ணீர் குடித்ததால் உயிர்யிழந்த பெண்! நீர் நச்சுத்தன்மையைப் பற்றி முழுமையாக விளக்கம்! மருத்துவர்களின் எச்சரிக்கை...