15 நிமிடத்தில் சாப்பிட்டா இலவசம்! அங்க தான் டுவிஸ்ட்டே இருக்கு! ஒரு வாய் சாப்பிட்ட நபரின் பரிதாப நிலையை பாருங்க! வைரலாகும் வீடியோ..



bengal-village-spicy-curry-challenge-london

லண்டன் நகரில் உள்ள பிரிக் லேன் பகுதியில் அமைந்துள்ள பெங்கால் வில்லேஜ் (Bengal Village) உணவகம், உலகின் மிகவும் காரமான கறி சவாலை நடத்தி வருகிறது. உணவுப் பிரியர்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

72 வகையான மசாலா கலந்த காரக் கறி

இந்த சவால் கரி, 72 வகையான கார மசாலா பொருட்கள் கலந்தது. ஒரு முறை சாப்பிட்டாலே உடலே சிலிர்க்கும் அளவுக்கு காரமாக இருக்கும் இந்த உணவு, உணவகத்தின் பிரமுக தயாரிப்பாக விளங்குகிறது.

சவாலை வெல்வோருக்குச் சலுகை

இந்த உணவின் விலை சுமார் ரூ.2,500 (21.95 பவுண்டுகள்) ஆக இருக்கிறது. ஆனால், 15 நிமிடத்திற்குள் கறியை முடித்தால் இலவசமாக வழங்கப்படும் என உணவகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளுக்கு உணவகம் பொறுப்பல்ல என எச்சரிக்கவும் செய்கிறது.

இதையும் படிங்க: உலகில் மக்கள் வாழ தகுதியற்ற நாடுகள்! இந்த இடங்களிலே இந்தியாவும் உண்டா?

டேனியல் என்ற இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பு

இந்த சவாலை டேனியல் என்ற இளைஞர் ஏற்க முயன்றார். ஆனால், முதல் கடியிலேயே அவர் உடல் முழுவதும் எரிவதை உணர்ந்தார். உடனே அவருடைய உடல்நிலை மோசமடைந்து நடக்க முடியாத நிலைக்குச் சென்றார். வீடியோவில், அவர் நடைபாதையில் அமர்ந்து துடிக்கிறார், தன்னைக் குளிரவைக்க டி-ஷர்ட்டை கழற்றியதும் பதிவாகியுள்ளது.

உணவக உரிமையாளர் எடுத்த முயற்சி

உணவக உரிமையாளர் ராஜ், காரத்தைக் குறைக்க மாம்பழம் கலந்த சிறப்பு பானம் வழங்கினார். ஆனால், டேனியலின் நிலை சீராகவில்லை என்பதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ

இச்சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. "@NoContextHumans" என்ற X பக்கம் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இது தற்போது 6 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

நெட்டிசன்களின் அதிர்ச்சி மற்றும் விமர்சனம்

டேனியலின் நிலையைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர், “சகோதரர் திரும்ப வர மாட்டார் போல!” என மீம்ஸ் உருவாக்கியுள்ளனர். மேலும், பலரும் இந்த வகை சவால்கள் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே ஏற்பாடு செய்யப்படுகின்றன என விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 6 வயது சிறுமியை கடிக்க பாய்ந்த தெரு நாய்கள்! நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ! திக் திக் நிமிட சிசிடிவி காட்சி...