காதல் கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி : விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட 21 வயது கணவர்.!

காதல் கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி : விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட 21 வயது கணவர்.!


Namakkal Man Suicide His Wife Went with Affair Boy

உருகி உருகி காதலித்த காதல் மனைவி தன்னை கைவிட்டு இடையில் கிடைத்த கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். கல்லூரி காதல் மாதங்களில் கசந்து 21 வயதில் பகுதிநேர வேலைபார்த்து படித்து வந்த இளைஞன் உயிரைமாய்த்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமைப்பட்டி, போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவரின் மகன் விமல் குமார் (வயது 21). இவர் நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துக்கொண்டே ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே கல்லூரியில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சுமலதா என்ற மாணவி படிக்கிறார். 

இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, நாமக்கல்லில் இருக்கும் தாத்தாவின் வீட்டிற்கு சுமலதாவை அழைத்து வந்த விமல் குமார், காதலியை ரகசியமாக திருமணம் செய்து குடித்தனமும் நடத்தி வந்துள்ளார். 

namakkal

இதனிடையே, காதல் மனைவி சுமலதாவுக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் விமல் குமாருக்கு தெரியவரவே, விமல் குமார் அதிர்ச்சியுடன் மனைவியிடம் விஷயத்தை கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு எழுந்துள்ளது. கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்துவிட்டது என எண்ணிய சுமலதா, கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். 

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்ட விமல் குமார், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த எருமபட்டி காவல் துறையினர், விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.