கொடுத்த பணத்தை என்னுடன் படுக்கையை பகிர்ந்து கழிச்சுக்கணு சொன்ன பெண்ணால் பெரும் பரபரப்பு.!namakkal-district---farin---money---sekar

நாமக்கலில் வெளிநாடு செல்வதற்காக காத்திருந்த நபர் ஒருவர் அதற்கான பணத்தை பெண் ஒருவரிடம் கொடுத்து, திருப்பிக் கேட்கும் போது என்னுடன் படுக்கையை பகிர்ந்து கழித்து கொள் என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல வேண்டும் வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நபரொருவரின் மனைவியின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அப்பெண் தன் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் என்றும் அவர் மூலம் உங்களுக்கு நல்ல வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சத்தை வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாகியும் அவரை வெளிநாடு அழைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த சேகர் தான் கொடுத்த பணத்தை அந்த பெண்ணிடம் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்மணியோ அவரிடம்  என்னிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டு அந்த பணத்தை கழித்து கொள் என்று நைசாக பேசியதால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.