தமிழகம் லைப் ஸ்டைல்

நோ சூடு..! நோ சொரணை..! திருமணவிழாவில் வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்..! இணையத்தில் வைரல்..!

Summary:

Mysteries banner in trichy marriage photo goes viral

திருச்சியில் நடந்த திருமண விழா ஒன்றில் மாப்பிள்ளையின் நண்பர்கள் அடித்த கட் அவுட் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து பூவாளூர் அருகே பல்லவபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன். இவருக்கும் விஜி என்ற பெண்ணுக்கும் லால்குடி அருகே உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 9 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.

பொதுவாக திருமணம் என்றாலே மணமகளின் நண்பர்கள், உறவினர்கள் மணமக்களை வாழ்த்தி பேனர் வைப்பது வழக்கமான ஓன்று. இந்த திருமணத்திலும் மணமக்களை வாழ்த்தி மணமகனின் நபர்கள் சிலர் வைத்த வித்தியாசமான பேனர் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதற்கு காரணம், அவர்கள் வைத்த பேனரில் நித்தியானந்தாவின் புகைப்படமும், அவரின் வசனமும் இடம் பெற்றிருந்ததுதான். நோ சூடு.. நோ சொரணை... என்று நித்தியானந்தா கோரிய வாசகங்கள் அந்த பேனரில் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து மணமகனின் நண்பர்கள் கூறும்போது, நித்தியானந்தா எதைப் பற்றியுமே கவலைப்படுவது கிடையாது. யார் எது சொன்னாலும் அவர் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்.

இதனால் அவருடைய கொள்கை தங்களுக்கு பிடித்துள்ளதாகவும், அதனாலயே அவரது புகைப்படத்துடன், அவரது வசனத்தையும் சேர்த்து பேனர் வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் இது வித்தியாசமாக தோன்றினாலும், பாலியல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள நித்தியானந்தாவை காவல்துறை தேடி வரும் நிலையில் அவரது புகைப்படத்தை திருமண வரவேற்பு பலகையில் அச்சிட்டது பலருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement