தமிழகம்

சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை! பரபரப்பு வீடியோ காட்சி

Summary:

Murder video in chennai

நாட்டில் வன்முறைகள் நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரி மாணவரை ஓட ஓட விரட்டி வெட்டும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் பெரியார் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே சில நாட்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தற்போது கொலை செய்யும் அளவிற்கு விபரீதத்தில் முடிந்துள்ளது. 

இந்த கொடூர சம்பவம் நேற்று காலை 11:30 மணியளவில் சாலை ஓரத்தில் அரங்கேறியுள்ளது. இந்த கொடூர காட்சியானது அந்த பகுதியில் இருக்கும் கடை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. 

அந்த வீடியோவில் 3 பேர் கொண்ட குமபல் ஒரு இளைஞரை துரத்தி வந்து அரிவாளால் வெட்டுகின்றனர். அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. இறுதியில் பல்த்த காயத்துடன் கீழே விழுந்த அந்த இளைஞரை கும்பலில் ஒரு நபர் சாகும் வரை விடாமல் வெட்டியுள்ளார். இதில் அந்த இளைஞர் சம்பவ இயத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


Advertisement