இந்தியா

அம்மாவை காணவில்லை என மகன் கொடுத்த புகார்.! சமையலறையில் புதைந்து கிடந்த கைவிரல்கள்.! போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

Summary:

கேரளாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீட்டின் சமையலறையில் புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவ

கேரளாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீட்டின் சமையலறையில் புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அடிமாலி பகுதியில் வசித்து வருபவர் சிந்து. 45 வயது நிரம்பிய இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீண்டகாலமாக இவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சிந்து தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிந்துவை கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் காணவில்லை என சிந்துவின் மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் சிந்து வசிக்கும் வீட்டின் அக்கம் பக்கத்தில் விசாரணை மேற்கொண்டதில், சிந்துவிற்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பினோய் என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. மேலும், பிரிந்த கணவரை அடிக்கடி சிந்து சந்தித்து வந்துள்ளார். இது பினோய்க்கு பிடிக்காததால் இனிமேல் கணவரை சந்திக்க கூடாது என்று பினோய் சிந்துவை கண்டித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் பினோய் மீது போலீசார் சந்தேகப்பட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சமையலறையில் புதிதாக குழி தோண்டப்பட்டு மணல்கள் சிதறி கிடந்தன. இதனையடுத்து அங்கு தோண்டி பார்த்த பொழுது சிந்துவின் கைவிரல்கள் தென்பட்டுள்ளது. இதனையடுத்து சிந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பினோய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள பினோய்யை தேடி வருகின்றனர்.     


Advertisement