தமிழகம்

கள்ளகாதலின் உச்சம்! விஷ பாம்பை விட்டு கடிக்க வைத்த மருமகள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

Summary:

murder for illegal affair

ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சு என்பவருக்கும் ஆல்பா என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் சச்சு ராணுவத்தில் பணியாற்ற சென்றுள்ளார். இந்தநிலையில் சிசுவின் மனைவி மற்றும் சிசுவின் தாய் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சச்சுவின் மனைவிக்கு மணீஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  மணீஷும் ஆல்பா இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெளியில் சென்று தனிமையில் சந்தித்துள்ளனர். இதனையறிந்த ஆல்பாவின் மாமியார் ஆல்பாவை கண்டித்துள்ளார்.   

இந்தநிலையில்  தனது காதலுக்கு இடையூராக இருந்த மாமியாரை தீர்த்துக்கட்ட ஆல்பா மாறும் மணீஷ் இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்றால், யாருக்கும் சந்தேகம் வராது என திட்டமிட்டு கடந்த ஆண்டு ஆல்பாவின் மாமியார்  வீட்டில் இருந்தப்போது விஷப்பாம்பை விட்டு கடிக்கசெய்து கொலை செய்துள்ளனர்.


பல நாட்களுக்கு பிறகு சச்சுவின் உறவினர்களுக்கு ஆல்பா மீது சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து சச்சுவின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆல்பா மாறும் மணீஷ் இவர்கள் தான் சச்சுவின் தாயை கொலை செய்தார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
 


Advertisement