தமிழகம்

வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்த கணவரை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி! வெளியான திடுக்கிடும் தகவல்.

Summary:

Murder

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி(45)- அங்கம்மாள்(40) தம்பதியினர். இவர்களுக்கு சாந்தி(20) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் அங்கம்மாளின் தாய் எல்லம்மாள் மகள் வீட்டிற்கு வந்துள்ளார்.

அன்று இரவு கந்தசாமி வெளியில் கட்டிலில் உறங்கி கொண்டிருந்துள்ளார். திடிரென நள்ளிரவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பாத்த போது கந்தசாமி உடலில் தீ பற்றி எரிந்துள்ளது. அதனை அடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால் அங்கு கந்தசாமி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுப்பட்ட போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது மனைவியே தனது மகள் மற்றும் தாயுடன் சேர்ந்து கணவனை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். அதனை அடுத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். 

அப்போது இதுகுறித்து அங்கம்மாள் கூறியதாவது. தனது கணவர் கந்தசாமிக்கும் சேலத்தை சேர்ந்த சரோஜா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் தனது கணவர் சொத்தில் பாதியை தருமாறு கேட்டு வந்துள்ளார். அதனால் தான் அவரை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். 


Advertisement