அடப்பாவிகளா.. பேய் விரட்டுவதாக தாய் உட்பட 3 பெண்கள் செய்த காரியம்! துடிதுடித்து உயிரிழந்த 7 வயது சிறுவன்! அதிர்ச்சி சம்பவம்!!



mother with 3 ladies attack and killed 7 years boy

ஆரணி அருகே பேய் விரட்டுவதாக கூறி ஏழு வயது சிறுவனை தாய் உட்பட 3 பெண்கள் தொடர்ந்து அடித்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கீழ்வைத்தியணான்குப்பத்தை சேர்ந்த திலகவதி என்பவரின் 7 வயது சிறுவன் உடல்நலக்குறைவால் அடிக்கடி கூச்சலிட்டுக் கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுவனுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அதனை விரட்டுவதற்காக வந்தவாசியில் உள்ள ஒருவரது வீட்டிற்கு சிறுவனை அழைத்து சென்றுள்ளார். உடன் அவரது சகோதரிகளான பாக்கியலட்சுமி, கவிதாவும் சென்றுள்ளனர். 

 அப்பொழுது அவர்கள் வந்தவாசிக்கு செல்லும் வழியில் கண்ணமங்கலம் பேருராட்சி மண்டபத்தில் தங்கியுள்ளனர். அப்பொழுது சிறுவனுக்கு வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் மூவரும் இணைந்து பேய் விரட்டுவதாக கூறி அந்த சிறுவனை நெஞ்சிலேயே கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து தாக்கியதில் சிறுவன் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.

young boy
இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் மக்கள் ஓடிவந்து பார்த்தநிலையில் சிறுவன் உயிரிழந்து கிடந்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார்கள் தாய் திலகவதி, பாக்கியலட்சுமி, கவிதா அனைவரையும் கைது செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.