மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மெடிக்களில் மருந்து வாங்கி கொடுத்த தாய்..! பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.!

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மெடிக்களில் மருந்து வாங்கி கொடுத்த தாய்..! பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.!


mother-who-gave-medicine-without-consulting-a-doctor-in

தற்போதைய வாழ்க்கைமுறையில் பலர் மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்தகங்களில் மருத்துவங்கி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் மருத்துவ ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை பயன்படுத்தும் போது எண்ணற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. 

இந்தநிலையில், திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் பகுதியை சேர்ந்த இரண்டரை மாத பச்சிளம் குழந்தை வயிற்று வலியால் துடித்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் தாய்  மருத்துவரை கலந்து ஆலோசிக்காமல் தானாகவே மெடிக்கலில் மருந்து வாங்கி குழந்தைக்கு கொடுத்துள்ளார்.

இதன்காரணமாக குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இரண்டரை மாத பச்சிளங் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தநிலையில், இது போன்று மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நோயாளிகளுக்கு மருந்துகளை தானாகவே வாங்கிக் கொடுக்க வேண்டாம் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.