பணத்திற்காக சொந்த மகளுக்கு துரோகம் செய்த தாய்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!



Mother sale daughter baby in madurai

மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் வசித்து வந்த 17வயது சிறுமி கோவையில் வேலை செய்த போது செல்வகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பமானார். இதில் சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி போட அப்பகுதி செவிலியர் சிறுமியின் வீட்டிற்கு சென்றபோது குழந்தை அங்கு இல்லை. இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது குழந்தையை தனது அம்மாவிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். 

madurai

இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயாரிடம் விசாரணை செய்ததில் அவரும் வழக்கத்திற்கு மாறாக பதில் கூறி குழந்தை பற்றிய தகவல் கூறவில்லை. இதனையடுத்து உடனடியாக செவிலியர் காந்திமதி பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைப்பு குழந்தையை தேடி வந்தனர். இதில் சிறுமியிடம் குழந்தையை வளர்ப்பதாக கூறி உசிலம்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் மூலம் குழந்தையை விற்க முடிவு செய்துள்ளனர்.

madurai

அதன்படி, பெங்களூரை சேர்ந்த கார்த்திகேயன், சீனிவாசன் ஆகிய இருவர் மூலம் பெங்களூரில் வசித்து வரும் எல்ஐசி ஊழியர் தேஜஸ்வரியிடம் 8 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுள்ளனர். இதனையடுத்து குழந்தையை விற்ற மற்றும் வாங்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.