மகனுடன் தனியாக வசித்துவந்த தாய்.! அலறல்சத்தம் கேட்டு ஓடி சென்றவர்களுக்கு காத்திருந்த கொலைநடுங்கவைக்கும் பேரதிர்ச்சி!!



mother-murdered-by-son-in-tirupur

திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சேகர். இவரது மனைவி ஆரோக்கிய மேரி. இவர்களுக்கு இரு மகள்களும், ஹர்ஷத் என்ற மகளும் உள்ளார். சேகர் பின்னலாடை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சேகர் இறந்தநிலையில், தனது கணவரின் பின்னலாடை நிறுவனத்தை ஆரோக்கியமேரி கையில் எடுத்து நடத்தி வந்தார். மேலும் சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட அவரது மகன் ஹர்சத் வேலைக்கு செல்லாமல் தனது தாயுடன் இருந்து வந்துள்ளார். 

Murder

ஆனால் அவர் அடிக்கடி பணம் கேட்டு தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஆரோக்கியமேரியிடம் பணம் கேட்டு, பெரும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.பின்னர் ஆத்திரம் முற்றிய நிலையில் தனது தாயையே கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த  நிறுவன தொழிலாளர்கள் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் குத்தப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆரோக்கியமேரியை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் பாதி வழியிலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.