தமிழகம்

11 மாத குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்த இளம்தாய்! அதிர்ச்சி காரணம்!

Summary:

Mother hanged after hanging baby

திருப்பத்தூர் மாவட்டம் நார்சாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 11 மாதத்தில் குழந்தையொன்றும் உள்ளது. இந்நிலையில் சிலம்பரசனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது கவிதாவுக்கு தெரியவந்தது.

இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது, இதனால் மனமுடைந்த கவிதா இன்று காலை கணவன் வேலைக்கு சென்ற பின்பு, தனது 11 மாத ஆண் குழந்தையை தூக்கில் மாட்டி விட்டு, கவிதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் கவிதா வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் கவிதா சடலமாக கிடந்துள்ளார். குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனையடுத்து சிலம்பரசனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement