பாதி எரிந்த நிலையில் கிடந்த மகனின் சடலம்..! நெஞ்சை கல்லாக்கி மகனின் மீதி உடலை எரித்த தாய்..! பார்ப்போரை கண்கலங்க வைத்த சம்பவம்..!

பாதி எரிந்த நிலையில் கிடந்த மகனின் சடலம்..! நெஞ்சை கல்லாக்கி மகனின் மீதி உடலை எரித்த தாய்..! பார்ப்போரை கண்கலங்க வைத்த சம்பவம்..!


mother-did-funeral-for-son-near-ariyalur

இறந்துபோன தனது மகனின் உடலை குறிப்பிட்ட ஜாதியினர் பொது தகன மேடையில் வைத்து தகனம் செய்ய மறுப்பு தெரிவித்த நிலையில் உடல் கீழே வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பாதி எரிந்தும் ஏரியாமலும் கிடந்த மகனின் உடலுக்கு தாய் கொள்ளிவைத்த சம்பவம்  அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தஞ்சாவூரில் சலூன் கடை நடத்திவந்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக கடையை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு வந்த நிலையில் கடையை பார்ப்பதற்காக சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூர் சென்றுள்ளார்.

dead

அப்போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்நிலையியல் அவரது உடலை எரிக்க  வேண்டி அந்தத் பகுதியில் உள்ள பொது சுடுகாட்டில் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்து உடலை எரிக்க தயாரான நிலையில், வேற்று சமூகத்தினர் வந்து தகன மேடையில் அடுக்கிவைத்திருந்த கட்டைகளை கீழே தூக்கி வீசி தகனம் செய்யவிடாமல் சண்டையிட்டுள்ளனர்.

பொது சுடுகாட்டில் எங்களுக்கு இடமில்லையா என கேட்ட போது, அவர்கள் இளைஞரின் குடும்பத்தினரை அடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வேறு வழியில்லாமல் உடலை கீழே வைத்து அவசர அவசரமாக எரித்துள்ளனர்.

அடுத்த நாள் காலை, சிலர் வந்து உங்கள் மகனின்  உடல் பாதி மட்டும் எரிந்து மீதி எரியாமல் கிடப்பதாக இறந்தவரின் தாயிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு பதறிப்போன தாய் பெண்கள் சுடுகாட்டிற்கு செல்ல கூடாது என பலர் தடுத்தும் கேட்காமல், தானே சென்று மகனின் உடலுக்கு கொள்ளி வைத்துள்ளார். பெற்ற மகனுக்கு தாயே கொல்லி வைத்த துயரம் எங்காவது நடந்த து உண்டா? என அந்த தாய் அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.