காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
தாய் மற்றும் மகள்களின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்... திருமணத்தை மீறிய உறவு இருந்ததா?.! போலீசார் தீவிர விசாரணை..!
மலையடிபள்ளத்தில் தாய் மற்றும் இரண்டு மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மாஞ்சான்விடுதி கிராமத்தில் வசித்துவருபவர் குமார். இவரது மனைவி மாரிக்கண்ணு, தனது இரண்டு மகள்களுடன் நேற்று சித்தன்னவாசல் அருகே மலையடிபள்ளத்தில் உள்ள நீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்தன்னவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மூவரது சடலத்தையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்தபின், மூவரின் உடலையும் வாங்க மறுத்த உறவினர்கள் மாரிக்கண்ணுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்ற நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், கருப்பையாவை கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு சமரச பேச்சுவார்த்தை நடத்தி, கருப்பையாவை கைது செய்து விசாரணை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், உறவினர்கள் மாரிக்கண்ணு மற்றும் அவரது மகள்களின் உடல்களை பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு சென்ற அடக்கம் செய்துள்ளனர்.