அரசியல் தமிழகம் இந்தியா

2வது முறையாக பதவியேற்ற பின்பு முதன்முறையாக சென்னை வந்த பிரதமர் மோடி! கவர்னர், முதல்வர் உற்சாக வரவேற்பு!

Summary:

modi came to chennai


இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் 56-வது பட்டமளிப்பு விழா ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று நடைபெற உள்ளது.

இதனையடுத்து இந்த 2 நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்துள்ளார். பிரதமர் மோடியை வரவேற்பதற்காக  விமான நிலையத்தில் தமிழக ஆளுநர், முதல் அமைச்சர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்  பூங்கொத்துகள் கொடுத்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

வரவேற்புக்கு பிறகு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்குகிறார்.

இதனையடுத்து சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு சென்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார்.  பிரதமர் மோடி 2வது முறையாக பதவியேற்ற பின்பு முதன்முறையாக சென்னை வந்துள்ளார்.
 


Advertisement