இனிமே சுடுகாட்டுக்கு நீங்க போக வேண்டாம்!.. பிணத்தை தூக்க ஆளில்லையா கவலையே படாதீங்க!.. வந்துடுச்சி மொபைல் சுடுகாடு...!!

இனிமே சுடுகாட்டுக்கு நீங்க போக வேண்டாம்!.. பிணத்தை தூக்க ஆளில்லையா கவலையே படாதீங்க!.. வந்துடுச்சி மொபைல் சுடுகாடு...!!



mobile crematorium was introduced in Erode

முதல் முறையாக தமி­ழ­கத்­தில் நட­மா­டும் மயான சேவைத் திட்­டம் அறி­முகப்­ப­டுத்தப்பட்டுள்­ளது.

நகர்ப்புற பகுதிகளில் உயிரிழப்பவர்களின் உடல்கள், ஈரோடு மாந­க­ராட்சியும் ரோட்­டரி ஆத்மா அறக்­கட்­ட­ளை­யும் இணைந்து 14  வருடங்களாக நடத்­தும் மின் மயா­னத்­தில் எரி­யூட்­டப்­ப­டு­கின்­றன. இதை தொடர்ந்து கிராம மக்­க­ளும் பயன் பெரும் வகையில் நட­மா­டும் பிணம் எரிக்கும் வாக­னத்தை அந்த அமைப்பு தயார் செய்துள்ளது. 

25 லட்­சம் ரூபாய் செல­வில் கேரள மாநிலம் திருச்சூரில், தகன மேடை வாக­னம் தயார் செய்யப்பட்டு, வாங்­கப்­பட்­டுள்­ளது. இந்த தகன மேடை வாகனம் வீடுகளுக்கே சென்று, இறந்­த­வர்­களின் உடல்­க­ளை பெற்று அடக்­கம் செய்யலாம். அதற்­கான கட்­ட­ணம் 7,000 ரூபாய் என்­று கூறப்பட்டுள்ளது.

இறந்த­ வ­ரின் உடல் ஒருமணி நேரத்தில் எரி­யூட்­டப்­பட்டு, அஸ்தி குடும்பத்தினரிடம் வழங்­கப்படும் என்­றும், கிரா­மப்­பு­றங்­களில் ஒதுக்­கப்­படும் இடங்­க­ளுக்குத் தகன மேடை கொண்டு செல்­லப்­பட்டு உடல்கள் தகனம் செய்யப்படும் என்றும், இத­னால் எரி­யூட்­டும் செலவு பாதி­யா­கக் குறை­ந்து நேர­மும் மிச்­ச­மா­கும் என்­று தொண்டு நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.