பாஜகவில் இணைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்! கமலுக்கு திடீர் அதிர்ச்சி! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

பாஜகவில் இணைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்! கமலுக்கு திடீர் அதிர்ச்சி!


மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மூன்று பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். 

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டிலே மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 


இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் 3 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். மக்களவை தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் ஸ்ரீ காருண்யா, சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ரவி மற்றும் அரக்கோணம் வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.          


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo