கொரோனாவில் இருந்து தப்பிக்க, எத்தனை சிரமங்கள் இருந்தாலும் இதனை மட்டும் செய்யுங்கள்! மு.க.ஸ்டாலின்.

Mk.stalin request to people


Mk.stalin request to people

கொரோனாவில் இருந்து தப்பிக்க, எத்தனை சிரமங்கள் இருந்தாலும் ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு தமிழகத்தில் மேலும் ஒரு மருத்துவர் பலியாகியிருப்பது கவலையையும்,பதற்றத்தையும் அதிகப்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

MK Stalin

 கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கும் செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கின் விதிமுறைகளை, எத்தனை சிரமங்கள் இருந்தாலும், முழுமையாகக் கடைப்பிடித்து, தனித்திருந்து, தற்காத்துக் கொள்ளுமாறு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.