சினிமா

இன்னும் தொடரட்டும்.. கவிஞர் வைரமுத்துவை சந்தித்து வாழ்த்திய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்! ஏன் தெரியுமா?

Summary:

மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர், ஞானபீட விருது பெற்ற ஓ.என்.வி குறுப். இந்நிலையில் கடந்த 2

மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர், ஞானபீட விருது பெற்ற ஓ.என்.வி குறுப். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அவரது பெயரால் ஓ.என்.வி  இலக்கிய விருது நிறுவப்பட்டது. மேலும் அது ஒவ்வொரு ஆண்டும் மூத்த மலையாள படைப்பாளர்களுக்கு, அவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல்முறையாக மலையாளி அல்லாத இலக்கியவாதியான கவிஞர் வைரமுத்துக்கு வழங்கப்பட உள்ளது.

அகில இந்திய அளவில் வழங்கப்படும் இந்த விருது பெறுவதை குறித்து வைரமுத்து மகிழ்ச்சியுடன்,  நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய பூமியான கேரளாவில் இருந்து இந்த விருது பெறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழுக்கு சகோதர மொழி சூட்டும் மகுடமாகவே நான் இதை எண்ணுகிறேன். இந்த உயரிய விருதை உலக தமிழர்களோடும், சக படைப்பாளிகளோடும் பகிர்ந்துகொள்கிறேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்த அவர், கேரளாவின் புகழ்பெற்ற ஓ.என்.வி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட கவிப்பேரரசு வைரமுத்து
அவர்களை, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்தினேன்.
தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசுவின் இலக்கியப் பயணம், எல்லைகளைக் கடந்து உலகளாவிய விருதுகளையும் பெற்றுத் தொடரட்டும் என வாழ்த்தியுள்ளார்.


Advertisement