தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பாதிப்பு ஏற்படுமா.? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த விளக்கம்.!

தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பாதிப்பு ஏற்படுமா.? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த விளக்கம்.!


mk-stalin-talk-about-corona-PUEW2R

தமிழகத்தில் கொரோனா பரவளின் 2வது அலை தீவிரமாக அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மே 10 முதல் 24 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருப்பதால் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக சென்னையில் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பாதித்தாலும் பெரிய பிரச்சினை இருக்காது. எனவே உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு தடுப்பூசி வாங்க உள்ளோம். 

coronaஇன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி வாங்கப்படும். கொரோனா தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற திட்டமிட்டு உள்ளோம். ஆக்சிஜன் தட்டுப்பாடு கடந்த காலங்களில் இருந்தது உண்மை, தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட முன் வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.