மாநிலம் முழுதும் வலம் வரப்போகும், மஞ்சள் நிற பேருந்து.! முதல்வர் துவக்கி வாய்ப்பு.! mk stalin starts yellow govt buses

புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள 100 நவீன வசதிகளுடன் கூடிய மஞ்சள் நிற பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடி அசைத்து துவங்கி வைத்துள்ளார். 

Tn govt

தமிழகம் முழுவதும் இருக்கும் 8 கோட்டங்களில் சேதம் அடைந்து காணப்படுகின்ற அரசு பேருந்துகளை சீரமைத்து, சீரமைப்பின் ஒரு பகுதியாக அவற்றிற்கு பழைய வண்ணங்கள் நீக்கப்பட்டு புதிய மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிற வண்ணம் தீட்டப்பட்டு பேருந்துகள் மாற்றப்பட இருக்கின்றன. 

Tn govt

பேருந்துகளின் நிறம் மட்டுமல்லாமல் இருக்கை வசதிகள் உள்ளிட்டவற்றையும் தமிழக போக்குவரத்து கழகம் மேம்படுத்த இருக்கிறது. முதல் கட்டமாக 100 பேருந்துகள் தற்போது சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து இயக்கி வைத்துள்ளார்.