கண்ணீர் விட்டு அழுத ஓபிஎஸ்.! தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கண்ணீர் விட்டு அழுத ஓபிஎஸ்.! தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!


mk stalin condolence to ops wife

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.

கடந்த ஒருவாரமாக உடல்நல குறைவால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி இன்று காலை 6.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். 

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும் மருத்துவர்களிடம் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். 

மனைவியை இழந்து துயரத்தில் இருக்கும் ஓ.பி.எஸூக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி தேற்றினார். அப்போது, துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன் உள்ளிட்ட திமுகவினரும், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், முனுசாமி உள்ளிட்ட அதிமுகவினரும் உடனிருந்தனர்.