மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி.!

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி.!



mk-stalin-announcement-for-physically-challenged-person

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை எவ்வித தாமதமும் இன்றி வழங்கிட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

நலத்திட்டங்கள், உபகரணங்கள் பெற விண்ணப்பித்துக் காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனடியாக அவ்வுதவிகளை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட தேவையான நடவடிக்கைகளை அரசு துறைகள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.

அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணச் சலுகை, வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை எவ்விதத் தொய்வும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.