சொல்ல வார்த்தைகள் இல்லை.! கணவர் சுந்தர். சியின் 30 ஆண்டு சினிமா பயணம் குறித்து ஓப்பனாக சொன்ன குஷ்பூ!
எனக்கும் சுகர் இருக்கு..!! சென்டிமென்ட்டோடு உருக்கமாக பேசி, மக்களை உருகவைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்டிமெண்டாக பேசி விராலிமலை தொகுதி மக்களின் ஓட்டுக்களை வேட்டையாடிவருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
அடுத்தமாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார் தற்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள். இந்நிலையில் வாக்குசேகரிப்பில் இறங்கியுள்ள வியாஜயபாஸ்கர் அவர்கள், பெண் வேட்பாளர்களை கவரும் விதமாக, தன் மூத்த மகள் ரிதன்ய பிரியதர்ஷினியை பிரச்சாரத்திற்கு உடன் அழைத்துச் செல்கிறார்.
பூதகுடி ஊராட்சி கல்குளத்துப்பட்டியில் உள்ள மாதா கோயில் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய விஜயபாஸ்கர், மக்களுக்காக கடந்த 10 ஆண்டுகாலமாக தான் அயராது உழைத்துவருவதாகவும், கொரோனா காலத்தில் மக்களுக்குகாக ஓடோடி உழைத்ததில் ஏழரை கிலோ எடை குறைந்து விட்டது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தனக்கும் சுகர், ரத்தக்கொதிப்பு, தலைசுற்றல், மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதாகவும், சரியாக தூங்கி, சரியாக உடற்பயிற்சி செய்யக்கூட நேரம் இல்லாமல் மக்களுக்காக உழைத்துவரும் நான், இயேசு நாதர் சிலுவையை சுமந்ததுபோல, விராலிமலை தொகுதியை சுமந்துகொண்டிருப்பதாகவும் பேசி மக்களை உணர்ச்சிவசப்பட செய்தார்.
மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தான் வெற்றிபெற ஏசுநாதர் தனக்கு கருணை காட்டுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.