இருசக்கர வாகனத்தின் மீது மினிவேன் மோதி பயங்கர விபத்து... வாகன ஓட்டி கீழே விழும் பதைபதைப்பு காட்சிகள்..!!
பின்னால் வந்த மினிவேன் மோதியதில் இருசக்கர வாகன ஓட்டி நிலைதடுமாறி கீழே விழுந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் ஆயக்காரப்புலத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 12ஆம் தேதி இந்த பெட்ரோல் பங்கிற்கு அருகே இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த மினிவேன் அதிவேகத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில் ஓட்டுநர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட சக வாகன ஓட்டிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தற்போது அவர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.