பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் ஒன்று சேர்ந்த பாக்யா மற்றும் கோபி..அதிர்ச்சியில் ராதிகா.?
சென்னையில் சமூக பரவலா? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!
சென்னையில் சமூக பரவலா? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா இந்தியாவிலும் அதிகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்திலே கொரோனா அதிகமாக பரவி வரும் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,392 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 36,841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 25,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நோயாளிகள் அதிகரிப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா நோயாளிகளை கவனமுடன் தமிழக அரசு கையாண்டு வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.