அரசியல் தமிழகம் Covid-19

தமிழக அமைச்சருக்கு கொரோனா உறுதி! அவருடன் நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சருக்கு கொரோனா பரிசோதனையா?

Summary:

Minister thangamani affected corona

உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கட்சி நிர்வாகிகள் மக்களை நேரடியாகச் சந்தித்து, செயல்பட்டு வருகின்றனர். இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தங்கமணி பங்கேற்றார். நேற்று முதல்வரை சந்தித்த அமைச்சர் தங்கமணி, மின்விசை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ.5 கோடிக்கான காசோலையை கொரோனா நிவாரணமாக வழங்கிய நிலையில், இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.


Advertisement