திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
பரந்தூர் விமான நிலையத்தால் 15,000 ஐடி வேலை; அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு.!

ஐடி துறையில் மிகப்பெரிய வளர்ச்சி பரந்தூர் விமான நிலையத்தின் வருகைக்கு பின்னர் நடைபெறும் என அமைச்சர் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அங்குள்ள பரந்தூர், ஏகனாபுரம் உட்பட 11 கிராமத்தை சேர்ந்த மக்கள், 900 நாட்களை கடந்து போராடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: அதிகாரிகளிடமே நடித்த ஞானசேகரன்; வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலம்.!
விஜய் பேச்சு
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஏகனாபுரம் மக்களை நேரில் சந்தித்து உரையாற்றி இருந்தார். மேலும், தான் வளர்ச்சி திட்டத்திற்கு எதிரானவன் இல்லை எனினும், பரந்தூர் பகுதியில், விவசாய பணிகள் நடைபெறுவதால், இங்கு விமான நிலையம் வேண்டாம் என கூறி இருந்தார்.
தேர்வு செய்தது, இடத்தை பரிந்துரைத்தது
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு விமான நிலையம் வர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பரந்தூரை தேர்வு செய்தது மத்திய அரசுதான் என கூறியது. மேலும், மத்திய அரசோ மாநில அரசு வழங்கிய பரிந்துரையின் பேரிலேயே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது என கூறியுள்ளது. பாஜக விமான நிலையம் வர ஆதரவு தெரிவிக்கிறது.
அமைச்சர் பேச்சு
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, "பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வருவதால், ஐடி துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். இதனால் 15000 நபர்களுக்கு ஐடி துறை வேலை கிடைக்கும். இந்தியாவிலேயே பேரூராட்சியில் 100 நாட்கள் வேலையை செயற்படுத்துவது தமிழ்நாடு மட்டுமே, இது மக்களுக்கான அரசு, திராவிட மாடல் ஆட்சி" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: பிரியாணிக்காக ஞானசேகரனிடம் தொடர்பில் இருந்த காவலர்கள்? - விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!