உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு புறப்பட்டது.!

உயிரிழந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு புறப்பட்டது.!


minister-dhuraikannu-body-going-to-his-village

தமிழக வேளாண் அமைச்சர் துரைகண்ணு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகள் மூலம் உச்சபட்ச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரின் உடல் உறுப்புகளின் செயல்பாடு மிகவும் மோசமடைந்து அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு சென்னையில் காலமானார். 

அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில், இன்று காலை சென்னை காவேரி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் திரு உருவப் படத்துக்கு மலர் தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

dhuraikannu

இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு புறப்பட்டது. அவரது சொந்த ஊரான வன்னியடி கிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. அஞ்சலிக்கு பிறகு அரசலாறு அருகே அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.