நான் இருக்கேன்..பயப்படாதீங்க.! ஐசியுவில் சிகிச்சைபெறும் நடிகர் போண்டாமணியை சந்தித்து தைரியம் கூறிய அமைச்சர்!!

நான் இருக்கேன்..பயப்படாதீங்க.! ஐசியுவில் சிகிச்சைபெறும் நடிகர் போண்டாமணியை சந்தித்து தைரியம் கூறிய அமைச்சர்!!


minister

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர் போண்டா மணி. இந்நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, இரு கிட்னிகளும் செயலிழந்தநிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் சக நடிகரான பெஞ்சமின் போண்டாமணிக்கு உதவுமாறு கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று மருத்துவமனைக்கு சென்று நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்துள்ளார்.  

அப்பொழுது அவர் அவரது உறவினர்களிடம், யாராவது கிட்னி கொடுக்க தயாராக இருந்தால், அல்லது யாராவது மூளை சாவடைந்து உறுப்புதானம் செய்ய முன்வந்தால் அரசாங்கமே எந்த செலவுமின்றி அறுவை சிகிச்சை செய்யும் என கூறியுள்ளார். மேலும் 
போண்டாமணியின் கையை பிடித்துக் கொண்டு “பயப்படாதீங்க, நான் இருக்கிறேன்” என தைரியம் கூறியுள்ளார்.

மேலும் அமைச்சரிடம் பேசிய போண்டாமணி தன்னை காப்பாற்றிவிட்டால் போதும், நான் சம்பாதிச்சு என் குடும்பத்தையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வேன். எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அனைவருக்கும் நல்லதுதான் செய்திருக்கிறேன் என கண்ணீருடன் பேசியுள்ளார்.