திடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு! சோகத்தில் இல்லத்தரசிகள்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் வர்த்தகம்

திடீரென பால்விலை உச்சகட்ட உயர்வு! சோகத்தில் இல்லத்தரசிகள்!


ஆவின் பால் லிட்டருக்கு ரூ.6 அதிகரிக்கப்பட்டதற்கு இல்லத்தரசிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஒரேயடியாக ரூ.6 அதிகரிப்பு அதிர்ச்சி அளிக்கிறது எனவும் கூறுகின்றனர். வாழ்வின் அன்றாட தேவைகளில் மிக முக்கியமானது பால். குழந்தைகளுக்கு பால் தான் முக்கிய உணவு. 

தற்போதைய வாழ்கை முறையில் டீ-காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் இல்லை. ஒருவேளைக்கு 2 முறையாவது ஒவ்வொரு வீட்டிலும் டீ-காபி போட்டு குடித்து விடுவார்கள். சிலருக்கு உணவு இல்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு நாளைக்கு குறைந்தது 2 முறையாவது டீ-காபியை குடிக்க வேண்டும், இல்லாவிட்டால் பித்து பிடித்ததுபோல் ஆகிவிடும்.

அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த விலை உயர்வு இன்று (19.08.2019) முதல் அமலுக்கு வருகிறது. 2014-ம் ஆண்டு கடைசியாக ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆவின் பால் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த பால் விலை உயர்வால், தயிர், மோர், நெய், வெண்ணெய் ஆகிய பொருட்களின் விலையும் உயரும் எனத் தெரிகிறது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.


Advertisement
TamilSpark Logo