70 நாட்களுக்கு பிறகு துவங்கப்பட்ட பேருந்து சேவை! புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி சென்ற பேருந்தை கல்லால் தாக்கிய பெண்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

70 நாட்களுக்கு பிறகு துவங்கப்பட்ட பேருந்து சேவை! புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி சென்ற பேருந்தை கல்லால் தாக்கிய பெண்!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 70 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்துக்கு சேவை தளர்வுகளுக்கு பின் இன்றுமுதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

இந்த பேருந்து சேவை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு பேருந்து இயக்கம் தொடங்கியது. இந்தநிலையில் இன்று காலை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆலங்குடிக்கு  சென்ற அரசு பேருந்து மீது ஒரு பெண் எறிந்த கல்லில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து சிதறியது.

இதனையடுத்து கண்ணாடி உடைக்கப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பேருந்தை நிறுத்தியுள்ளார் ஓட்டுநர். அருகில் இருந்த போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விசாரணையில் கல் எறிந்த அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo