சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளி.. அரசுப்பள்ளி விழிப்புணர்வால் சிறுமி எடுத்த திடீர் முடிவு.!

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளி.. அரசுப்பள்ளி விழிப்புணர்வால் சிறுமி எடுத்த திடீர் முடிவு.!


men-arrested-for-a-gurl-abused

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை அரசுப்பள்ளி விழிப்புணர்வால், தைரியமாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து புகார் அளிக்குமாறு கூறிய சம்பவம் மற்ற பெண்களுக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளது.

வேலூர் மாவட்டம், ஓட்டேரி பகுதியில் வசித்து வருபவர் செல்வகுமார் (வயது 41). இவர் ஒரு மூட்டை தூக்கும்  தொழிலாளி ஆவார். கடந்த டிசம்பர் 11ஆம் தேதி அருகாமையில் அமைந்துள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் இவர்  பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். 

மேலும், இந்த விஷயம் தொடர்பாக யாரிடமும் கூறக்கூடாது எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்ல இயலாமல் வெகு நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

இதையடுத்து, பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த நிலையில், சிறுமி படிக்கும் அரசுப் பள்ளியிலும் பாலியல் வன்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துள்ளது. 

vellore

அப்போது 'குட் டச்', 'பேட் டச்' என்பன குறித்தும்,தங்களுக்கு யாரேனும் பாலியல் தொல்லை அளித்தால் அதனை உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அங்கு உள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியால் விழிப்புணர்வு அடைந்த சிறுமி தனது பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை விவரித்து தைரியமாக கூறியுள்ளார். அத்துடன் காவல் துறைக்கு சென்று புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

சிறுமி கூறியதை கேட்டு பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், செல்வகுமாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.