மில்க் பியூட்டி தமன்னாவின் பளபளப்பு மேனிக்கான காரணம் இதுதானா?? அவரே உடைத்த சீக்ரெட்!!



tamanna-shares-her-beauty-secret

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். தனது நடிப்பு திறமையால் திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை நடிகை தமன்னா நிலைநாட்டியுள்ளார்.

மேலும் தற்போதும் படங்கள், வெப் தொடர்கள் என பிசியாக திரையுலகை கலக்கி வருகிறார். அதுமட்டுமின்றி ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற படங்களிலும் ஒற்றைப் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். மில்க் பியூட்டி என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தனது பளபளப்பான மேனியின் ரகசியம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

tamanna

அந்த பேட்டியில் அவர், நான் சரும பராமரிப்பு முறை ஒன்றை  நாள்தோறும் தவறாமல் பின்பற்றி வருகிறேன். எனது சிறந்த  சருமத்துக்கான ரகசியம் அதுதான். சரும பராமரிப்பு என்பது நாள்தோறும் உடற்பயிற்சி, நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு, நல்ல மனநலம் இவைதான். இவை அனைத்துமே சருமத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ளும். அதைத் தவறாமல் செய்தால் சிறந்த பலனளிக்கும் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தேசிய விருது பெற்ற நடிகையா.!?

இதையும் படிங்க: "நீதான் என் உயிருன்னு சொன்னா நம்பாதீங்க., எல்லாம் பொய்" - நடிகை அனுபமா காதல் அட்வைஸ்.!!