புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தேசிய விருது பெற்ற நடிகையா.!?
கீர்த்தி சுரேஷின் திரை பயணம்
தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களை நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் இது என்ன மாயம் என்ற திரைபடத்தில் கதாநாயகியாக நடித்துக் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தனது பெயரை நிலைநாட்டியுள்ளார்.
தேசிய விருதை வென்ற கீர்த்தி சுரேஷ்
இதில் குறிப்பாக, ரஜினிமுருகன், ரெமோ, அண்ணாத்த, தானா சேர்ந்த கூட்டம், பெண் குயின், நடிகையர் திலகம் போன்ற படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. இதன்படி இவர் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி, பல விருதுகளை பெற்றுள்ளார், அதில் சிறந்த நடிகையாக நெல்சன் விருது, தேசிய விருது உட்பட பல விருதுகள் உள்ளன.
இதையும் படிங்க: குஷ்புவிடம் வாய்ப்பு கேட்ட ஹீரோ.. செருப்பால அடிப்பேன் என திட்டிய நடிகை.!
மேலும் தமிழ் சினிமாவிலேயே கீர்த்தி சுரேஷ் பற்றி தான் அதிக அளவு வதந்திகள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கீர்த்தி சுரேஷும், அவரது குடும்பத்தினரும் பல பத்திரிகைகளிலும் பேட்டி அளித்து தங்கள் வருத்தத்தையும் தெரிவித்து இருந்தனர். இது போன்ற நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தனது15 வருட காதலரை திருமணம் செய்யப் போவதாக செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன.
சிறு வயது புகைப்படம் வைரல்
இதனை அடுத்து தற்போது கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் நடிகை கீர்த்தி சுரேஷா இந்த குட்டி குழந்தை என்று கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!