அரசியல் தமிழகம்

ஜெயலலிதா சமாதியில் நடந்த திருமணம்! களைகட்டிய மெரினா கடற்கரை!

Summary:

marriage in merina beach


சென்னை கூட்டுறவு சிறப்பு அங்காடி இயக்குனராக இருப்பவர் எஸ்.பவானிசங்கர். இவர் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசியான இவர் தனது மகனின் திருமணத்தை ஜெயலலிதா சமாதி முன்பு நடத்த முடிவு செய்து, கட்சியின் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பவானிசங்கரின் வேண்டுதலுக்கு கட்சியின் தலைமை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று பவானிசங்கரின் மகன் சாம்பசிவராமன் என்பவருக்கும் தீபிகா என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய ஜெயலலிதா நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் ஒன்று கூடிய நிலையில் மேளதாளங்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் தாலியை மணமகன், மணமகள் கழுத்தில் கட்டினார். பின்னர் மணமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி வந்து வணங்கினர்.

இதுகுறித்து பவானிசங்கர் கூறுகையில், ஜெயலலிதா நினைவிடத்தில் எனது மகன் திருமணம் நடந்துள்ளதால், புரட்சித்தலைவி அம்மாவின் ஆன்மா நிச்சயம் மணமக்களை ஆசீர்வதித்திருக்கும் என கூறினார். மெரினாவுக்கு வந்த பெரும்பாலானோர் ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று பார்த்து சென்றனர்.


Advertisement