BREAKING : தமிழகத்தில் CM விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்.! 7 பேரை அதிரடியாக கைது செய்த போலீஸ்...!!!



manimangalam-gaana-singers-murder-arrest-update

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் கானா பாடகர்கள் பரத் மற்றும் சீனு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக 2 சிறார்கள் உட்பட மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிமங்கலம் பகுதியில் வசித்து வந்த கானா பாடகர்களான பரத் மற்றும் சீனு, நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கிக் கொலை செய்யப்பட்டனர். இரட்டை கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: BREAKING: சிவகங்கை எம். பி கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! பெரும் பரபரப்பு..!!

தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய தனிப்படை அமைத்தனர். பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 2 சிறார்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைக்கான பின்னணி, முன்விரோதம் அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் தவெக ஆதரவாளர்கள் பதிவு

இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக எக்ஸ் தளத்தில், தமிழகத்தில் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக முதல்வர் விஜய் கடுமையான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், குற்றவாளிகளை விரைவாக கைது செய்த போலீசாரின் நடவடிக்கையை வரவேற்று, அதனை தவெக நிர்வாகத்தின் செயல்திறனுடன் இணைத்து பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.