இரவு முழுவதும் செல்போனில் முழ்கிய கணவர்! சந்தேகத்தில் செல்போனை எடுத்து பார்த்த மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Manaparai edwin


Manaparai edwin

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சேர்ந்தவர் எட்வின் ஜெயகுமார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தஞ்சையை சேர்ந்த தாட்சர் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணமான பிறகு இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஆனால் சில நாட்களாகவே கணவரின் நடத்தையில் தாட்சருக்கு சந்தேகம் வந்துள்ளது. காரணம் எட்வின் இரவில் அதிக நேரம் செல்போனையே பார்த்து கொண்டு இருப்பது தாட்சருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

Manaparai

இதனால் தாட்சர் தனது கணவரின் செல்போனை பார்த்த போது அதில் எட்வின் பல பெண்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள், வீடியோகள் இருந்துள்ளன. அதில் பல ஆபாசமாகவும் இருந்துள்ளன.இது குறித்து கணவரிடம் கேட்ட போது எட்வினும், அவரது அம்மாவும் சேர்ந்து தாட்சரை மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மனைவி தாட்சர் தனது தந்தையுடன் இணைந்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதனை அடுத்து போலீசார் எட்வின் உட்பட 5 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் எட்வின் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்து முன் ஜாமீனை பெற்று தலைமறைவானார்.ஆனால் தாட்சர் நீதிமன்றத்தில் கணவரின் செல்போன் ஆதாரங்களை காட்டி முன் ஜாமீனை தள்ளுப்படி செய்தார். இந்நிலையில் தற்போது தலைமறைவான எடுவினையும் மற்ற நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.