உஷார் மக்களே..! பட்டப்பகலில் அசால்டாக பைக்கை திருடும் பலே திருடன்..! வெளியான சிசிடிவி காட்சிகள்.

உஷார் மக்களே..! பட்டப்பகலில் அசால்டாக பைக்கை திருடும் பலே திருடன்..! வெளியான சிசிடிவி காட்சிகள்.


Man steeling bike viral cctv footage

கடலூர் அருகே பட்டப்பகலில் நபர் ஒருவர் சாலை ஓரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகிவருகிறது.

பழைய பேருந்து நிலையம் அருகே முகமது ரபீக் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடைக்கு முன் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று வியாபாரத்தை கவனித்துவந்துள்ளார். இந்நிலையில் ரபீக்கின் கடை முன் வந்த நபர் ஒருவர் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரபீக்கின் இருசக்கர வாகனத்தை மெதுவாக நகர்த்தி லாவகமாக திருடி சென்றுள்ளார்.

அடையாளம் தெரியாத அந்த நபர் இருசக்கர வாகனத்தை நகர்த்துவது, பின்னர் வாகனத்தை அங்கிருந்து திருடி செல்லும் காட்சிகள் ரபீக்கின் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு போலீசார் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற  நபரை தேடிவருகின்றனர்.

பட்டப்பகலில் மக்கள் கூட்டம் நிறைந்த சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நபர் ஒருவர் திருட்டி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.